• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பெரியகுளத்திலுள்ள தேவர் சிலைக்கு ஓ.பி.எஸ். மரியாதை

Byமதி

Oct 30, 2021

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் முத்தராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியுள்ளார்.

பொதுவாக முத்தராமலிங்க தேவரின் சொந்த ஊரான பசும்பொன் சென்றுதான் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்துவார்கள் என்ற நிலையில், இந்தாண்டு ஓ.பன்னீர்செல்வம் பசும்பொன் செல்லாமல் தன் சொந்த ஊருக்கு அருகிலேயே இருந்த முத்தராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இன்று ஓ.பி.எஸ். அவர்களின் மனைவி காலமாகி, 60ஆவது நாள் அனுசரிக்கப்படுவதினால் அவர் பசும்பொன் செல்லாமல் சொந்த ஊரிலேயே மரியாதை செலுத்தியதாக சொல்லப்படுகிறது.