மதுரை மாவட்ட அளவிலான கபடி போட்டி வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் அய்ங்கோட்டைஅரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள்14 வயது பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனை மாணவிகள் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் அருண் ஆகியோரை தலைமையாசிரியர் மாரிச்செல்வம் உதவி தலைமையாசிரியர் சித்தார்த்தன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
