ஓபிஎஸ்-டிடிவி இணையவிருப்பதாக பேசப்பட்டுவரும் நிலையில் வரும் 15ம் தேதி ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என டிடிவி தரப்பு தெரிவித்துள்ளது.
ஒற்றைத்தலைமை விவகாரத்தில் அதிமுகவிலிருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு விட்ட ஓபிஎஸ் அடுத்தகட்ட நடவடிக்கையாக சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் இணையலாம் எனறு கூறப்பட்டு வருகிறது. ஓபிஎஸ் உடன் இணைய தயாராக இருப்பதாக டிடிவியும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த இணைப்பு குறித்து வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அமமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே இது குறித்த முடிவை டிடிவி அறிவிக்க உள்ளாராம்.