பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து ஓபிஎஸ் தரப்பு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.