• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய செயலாளர்களை அறிவித்தார் ஓபிஎஸ்..!

ByA.Tamilselvan

Nov 18, 2022

தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக இளைஞரணி இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த கருப்பூர் கே.சீனி என்கிற ராஜகோபால் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
தூத்துக்குடி புறநகர் வடக்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் தெற்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி புறநகர் தெற்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் வடக்கு என மூன்று மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். எஸ்.ஏசாதுரை (தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்), டாக்டர் ம.புவனேஸ்வரன் (தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), டி.வினோபா ஜி, (தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)” என்று அதில் கூறியுள்ளார்.