• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ரயில்வே மேம்பாலம் அமைவதற்கு எதிர்ப்பு – வியாபாரிகள் மனு அளித்தனர்

Byகிஷோர்

Dec 1, 2021

விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து இருக்கண்குடி செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில்வே மேம்பாலப் பணிக்காக ரயில்வேபீடர் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்ற படுவதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று பாதையில் அமைக்க வலியுறுத்தி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் மற்றும் வட்டாட்சியர் முத்துலட்சுமியிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் ரயில்வே மேம்பாலம் அமைவதற்கான மாற்று பாதையையும் வியாபாரிகள் சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.