• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி போராட்டம் …

Byகாயத்ரி

Jun 21, 2022

அக்னிபாத்’ புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 24-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விவசாயிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெறும். 24-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் இளைஞர்கள், பொதுஜன அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினரையும் திரளாக பங்கேற்கச் செய்ய வேண்டும்.’ என்று கேட்டுக்கொண்டுள்ளது.