
புதுச்சேரி பாஜக சார்பில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது, இதில் 100-க்கணக்கான பெண்கள் பங்கேற்று தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு, ஆப்ரேஷன் செந்தூர் மூலம் பதிலடி கொடுத்து தீவிராதிகளின் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேச ஒற்றுமயை வலியுறுத்தும் விதமாகவும் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு தலைமையில் புறப்பட்ட ஊர்வலத்தை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாஜக தலைவர் செல்ல கணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஊர்வலமானது உழந்தை கீரப்பாளையம் சந்திப்பில் இருந்து புறப்பட்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் மரப்பாலம் சந்திப்பு சென்று மீண்டும் உழந்தை கீரப்பாளையம் சந்திப்பில் நிறைவடைந்தது.
பேரணியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், வழக்கறிஞர் குமரன்,முதலியார் பேட்டை தொகுதி வளர்ச்சி இயக்க தலைவர் கணபதி, மற்றும் முன்னாள் கவுன்சிலர் செல்வகணபதி, நிர்வாகிகள் சின்னத்தம்பி, மஞ்சுளா திருச்சந்திரன் பாஜக பிரமுகர் வெற்றி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
