
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதிக அளவில் பரவினால் அது சமாளிக்க வேண்டிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் சமீப காலமாக சளி, காய்ச்சல், இருமல், என அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு டெங்கு, மலேரியா, உள்ளிட்ட பரி சோதனைகள் செய்வது போன்று கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது .கடந்த வாரம் எட்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர். ரவிச்சந்திரன்…
தமிழகத்தில் உள்ளது போன்று அதிகப்படியான தொற்று புதுச்சேரியில் இல்லை இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, காய்ச்சலால் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்யப்படுகிறது தற்போது 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர்,
அதிக அளவில் தொற்று ஏற்பட்டால் கோரிமேட்டில் உள்ள நெஞ்சக மருத்துவமனையில் தனியாக பத்து படுக்கை மற்றும் இரண்டு வெண்டிலேட்டருடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றார்.
கொரோனா தொற்று சம்பந்தமாக மத்திய அரசு எந்தவித வழிகாட்டுதல்கலும் தெரிவிக்கவில்லை, மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை,இருந்தாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் கொரோனா பாசிட்டிவ் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
