• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு

Byகுமார்

Sep 25, 2021

இந்தியா முழுவதும் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை திறக்கப்பட்ட நிலையில், கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் 5 முதல் 12ம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளிகள் திறப்புக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே, சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளனர்.