• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் இ.சேவை மையம் திறப்பு..!

ByKalamegam Viswanathan

Jun 16, 2023

காரியாபட்டியில், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இ-சேவை மையத்தை அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், படித்துவரும் பள்ளிமாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று போன்ற பல்வேறு வகையான சான்றுகளை பதிவு செய்வதற்கு இ-சேவை மையங்களுக்கு சென்று வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என்று, அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காரியாபட்டியில் உள்ள திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையத்தையும், கள்ளிக்குடி சாலையில் சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்ட இ.சேவை மையத்தையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்டக் கவுன்சி லர் தங்க தமிழ்வாணன், மாவட்ட விவசாய தொழிலா ளர் அணி தலைவர் தங்க பாண்டியன், துணைத் தலைவர் கல்யாணி, காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் சங்கரேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.