• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் வடுகப்பட்டி ஊராட்சியில் ஒன்றியத்தில் புதிய ரேசன் கடை திறப்பு – எம்எல்ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார்

ByN.Ravi

Mar 2, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடையை, எம்.எல்.ஏ. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் அன்புமுத்து, ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், ஒன்றிய துணைச் செயலாளர் அருண், யூனியன் ஆணையாளர்கள் கலைச்செல்வி, பிரேமராஜன், ஒன்றிய குழுத் தலைவர் பஞ்சு அழகு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சுவாமிநாதன், நகரச் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தவசதிஷ், இளைஞரணி சந்தன கருப்பு, துணை அமைப்பாளர் பிரபு, மாணவரணி யோகேஷ், பொறியாளர் அணி ராகுல், மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.