• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ByN.Ravi

Mar 2, 2024

சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மற்றும் குரு பகவான் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை அன்னதானம் திமுக சார்பாக வழங்கப்பட்டது இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் அன்னதானம் வழங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள்ராஜா,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் தனபாலன், ரேகாவீரபாண்டி, கார்த்திகாஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதே போல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் 71ஆவது பிறந்த தின விழா முன்னிட்டு திமுக சார்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது. இதில் நகரச்செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் துணைத் தலைவர் லதா கண்ணன்மாவட்ட பிரதிநிதி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் குருசாமி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன் அன்னதானம் வழங்கினார். இதில் அவைத் தலைவர் தீர்த்தம் மீனவராணி முனியாண்டி பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் முத்துச்செல்விசதீஷ்குமார், சிவா, நிஷாகௌதமராஜா செல்வராணிஜெயராமச்சந்திரன் கொத்தாலம் செந்தில் வேல் குருசாமி முட்டை கடை காளி சுரேஷ் மாணவர் அணி எஸ் ஆர் சரவணன் சங்கங்கோட்டை சந்திரன் ரவி மில்லர் நூலகர் ஆர் எம் எஸ் காலனி ஆறுமுகம்தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்பார்த்திபன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி ஒன்றாவது வார்டு பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் பேரூரர் துணைச் செயலாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் பேரூராட்சி பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் முத்து செல்வி சதீஷ் நிஷா கௌதம ராஜா மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்