• Mon. Apr 21st, 2025

மதுரையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 647 வது கிளை திறப்பு

Byகுமார்

Aug 22, 2022

மதுரை திருச்சி பிரதான சாலையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 647 வது கிளை திறக்கப்பட்டது
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மதுரை திருச்சி பிரதான சாலையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 647 வது கிளை திறக்கப்பட்டது இவ்விழாவிற்கு தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர் செல்வராஜ் தலைமையிலும்கிளை மேலாளர் காயத்ரி வட்டார மேலாளர் கந்தசாமி முன்னிலையிலும் பொது மேலாளர்கள் வாசுதேவன் தாமோதரன் மற்றும்மேலூர் சேர்மன் முகமது யாசின் ஆகியோர் திறந்து வைத்தனர்.இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.இவ்விழாவில் பொதுமக்களுக்கு வீட்டுக் கடன் வழங்கப்பட்டது மற்றும் பொதுமக்கள் டெபாசிட் மற்றும் புதிய வங்கி கணக்குகளை துவங்கினர்.

அதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர்கள் வட தமிழகத்தில் பல்லவன் கிராம வங்கியாகவும் தென் தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கியாகவும் செயல்பட்டது. இவ்விரு வங்கிகளையும் 2019 ஆம் ஆண்டு ஒன்றிணைத்து தமிழ்நாடு கிராம வங்கி என ஆரம்பிக்கப்பட்டது. எனவும் தமிழ்நாடு கிராம வங்கியின் சேவைகள் செயல்பாடுகளை பற்றியும் நகை கடன் பயிர் கடன் வீட்டு கடன் குறைந்த வட்டி வீதத்தை பற்றியும் மற்றும் பல்வேறு சேவைகள் குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி பயனடையுமாறு விளக்கினார். விழாவில் ஏராளமான பொதுமக்கள் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்விழாவில் கலந்து கொண்ட வங்கி அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்