தென் அமெரிக்க நாடான பாராகுவேயில் மகாத்மா காந்தியின் சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவே சென்றடைந்தார். இந்நிலையில், பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார். தலைநகர் அசன்சியன் நகரின் முக்கிய நீர்முனையில் சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவை பாராட்டினார். மேலும், பராகுவேயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.