சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர்.
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் சென்னையில் தொடங்கியிருக்கிறது.
மேலும் இதனை மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து போட்டோஸ் வெளியாகியுள்ளன. அதில் இயக்குநர் நெல்சன் உடன் ஸ்டண்ட் சிவா மற்றும் ஷூட்டிங் நடைபெறவுள்ள காவல் நிலைய செட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.