ஃபெஞ்சல் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், இன்றும், நாளையும் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை – மேட்டுப்பாளையம், உதகை – குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படும். மழைக் காலங்களில் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.