• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் காசோலை சேலாஸ் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஊற்று நீர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊற்று நீரின் மீது கோழி கழிவுகள், இறந்த கோழிகள், குப்பைகள் போன்றவற்றை இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் எடுத்து வந்து கழிவுகளை கொட்டி குடிநீரை அசுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த குடிநீரை பயன்படுத்துபவர்களுக்கு உடல் நலக்குறைவு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் குழாய்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு ஒவ்வொரு இடங்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் ஆள் நடமாட்டம் இன்றி உள்ள இந்த இடத்தில் தண்ணீரின் மீது குப்பைகள் கோழி கழுவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால் கடுமையான துர்நாற்றமும் இப்பகுதியில் வீசி வருகின்றன. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.