

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி யார் ஆணைக்கிணங்க அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் மூன்று நாட்களுக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகம் முன்பாக தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் மருதராஜ், கழக மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி பி பி பரமசிவம், மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.