• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி

ByKalamegam Viswanathan

Jun 12, 2023

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்றவர் நீரில் முழ்கி பலியானார் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மதுரை மாவட்டம் கூத்தியார் கூண்டு கம்மாயில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த காசி வயது 54 என்பவர் குளிக்க சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டார் குளிக்க சென்றவர் நீண்ட நேரமாக வராததைக் கண்ட அவரது உறவினர்கள் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு நேரம் எனும் பாராமல் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு காசியின் உடல் குவிக்கப்பட்டது உடலை ஆஸ்டின் பட்டி சார்பு ஆய்வாளர் சிவலிங்கம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…