• Sun. Mar 16th, 2025

கோவையில் சிறைக் கைதி உருவாக்கிய எலக்ட்ரிக்கல் சைக்கிள்..!

Byவிஷா

Jun 12, 2023

கோவையில் ஆயுள்தண்டனை பெற்ற கைதி ஒருவர் எலக்ட்ரிக்கல் சைக்கிள் ஒன்றை வடிவமைத்திருப்பது அனைவரையம் வியக்க வைத்திருக்கிறது.
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சோலார் மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிகல் சைக்கிள் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார். கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர். இவருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த இவர் சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு இருந்த பழைய சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்றி வடிவமைத்துள்ளார். இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி பிளாக் மற்றும் டைனோ உதவியுடன் டார்ச் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கமான சைக்கிள் ஆகவும் தேவைப்பட்டால் இ-பைக் ஆகவும் இதை பயன்படுத்திக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் சைக்கிளை வடிவமைத்து இருக்கும் இவர் இன்னும் பத்து சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டு இருக்கிறார்.