• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்..,

ByK Kaliraj

Jul 2, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள குரு லக்ஷ்மி பைரோ டெக்ஸ் என்னும் பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 4.00 மணி அளவில் (நாக்பூர் உரிமம்) வெடி விபத்து ஏற்பட்டதில், ராசம்மாள் (வயது சுமார் 60) என்பவர் படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். தீ விபத்து தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தேனி மாவட்டங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு மணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தாசில்தார் ஆண்டாள் பட்டாசு ஆலை நேரில் பார்வையிட்டார்.

இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.