• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‘பாரதியும் சுற்றுச்சூழலும்’ தலைப்பில்..,மரம் நடும் நிகழ்ச்சி நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..!

ByKalamegam Viswanathan

Dec 12, 2023

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாரதியார் பிறந்தநாள் நிகழ்ச்சி, பாரதியும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மாணவர்கள் இணைந்து பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன் முன்னிலை வகித்து ஆசிரியர்களுக்கு அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனை அறிமுகம் செய்து வைத்தார்.
வழிகாட்டி மணிகண்டன் தனது தனிப்பட்ட சேமிப்பில் வாங்கப்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் கரங்களில் வழங்கி பள்ளி வளாகத்தில் நடச் செய்தார்.
நிகழ்ச்சியில் பாரதியும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் உரையாற்றிய வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில்:
பாரதியார் இந்திய தேசம் மட்டுமல்லாமல் உலகின் அனைத்து மானுட நன்மைக்காக கவி பாடினார். மக்களிடம் பொதுநல சிந்தனை மற்றும் சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தினார். அவரது ஒளியும் இருளும் என்ற கவிதைத் தொகுப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்த கருத்துக்களை மையப்படுத்தி கவிதைகள் எழுதியுள்ளார். அவரது பிறந்தநாளில் மாணவர்கள் மானுட நலனுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பாடுபட உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர் ரமேஷ்குமார், பசுமை குழு மாணவர்கள், ஆசிரியர்கள், தோட்ட பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.