• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி, அரிசி, அன்னதானம்..,

ByK Kaliraj

Jul 15, 2026

சாத்தூர் அருகே சாத்தூர் மேற்கு வட்டாரம் ஒத்தையால் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட opc பிரிவு தலைவர் சுப்புராம் தலைமையில் மேற்கு வட்டாரத்துணை தலைவர் முத்துவேல் ஏற்பாட்டில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி தூவி
மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த அதிக மதிப்பெண் எடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ஹரி சங்கருக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்டோருக்கு 10கிலோ அரிசி வழங்கப்பட்டது மேலும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிகழக ஒன்றிய,கிளை செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.