• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு..,திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்த ரசிகர்கள்..!

ByKalamegam Viswanathan

Dec 12, 2023

திருப்பரங்குன்றம் அருள்மிகு அருள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில், மாவட்டத் தலைவர் பால தம்புராஜ், முன்னாள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமரவேல், மாவட்ட செயலாளர் அழகர்,திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன், அவனி பாலா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு, நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் பெயர் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தங்க ரதமும் இழுக்கப்பட்டது ரஜினிகாந்த் பூர்ண நலத்துடன் வாழ ரசிகர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர் கார்த்திகை மாத சோமவாரம் என்பதால் முருகனை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்கள் தங்கரதத்தையும் தரிசனம் செய்தனர்.