மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி ஸத்சங்கம் சாலை பகுதியில் காதர்முகைதீன் என்பவர் ஆரிப் என்ற பெயரில் இறைச்சிகடை நடத்திவருகின்றார். இந்நிலையில் இன்று காலை கடை திறக்கப்பட்டு விற்பனை முடிவடைந்த நிலையில் கடை அடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாலையில் திடீரென இறைச்சி கடையில் இருந்து புகை மளமளவென வெளிவர தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த டவுண் தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள பகுதிகளில் த் பராவமல் வரைந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்து எலக்ட்ரானிக் தராசுகள், கறி வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டைகள் மற்றும் இருக்கைகள் சேதமடைந்தது.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில் தீ விபத்து சம்பவம் குறித்து எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் இறைச்சி விற்பனை கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.