• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

5-வது நாளாக வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டும் புலி

Byமதி

Sep 30, 2021

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அவ்வப்பொது புலிகளின் நடமாட்டம் காணப்படும். அந்த சமயங்களில் வனத்துறையினர் உரிய நடடிக்கைகளைஎடுத்து புலியை காட்டுக்குள் அனுப்பிவிடுவர்.

அப்படி சமீபத்தில் 3 பேரைக் கொன்ற ஒரு புலி, மேல்பீல்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை ஒட்டிய புதரில் பதுங்கியிருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். மேல்பீல்டு பகுதியிலிருந்து மீண்டும் தேவன் எஸ்டேட் பகுதியை நோக்கி நகர்ந்த புலியை பின் தொடர்ந்த வனத்துறையினர் பல்வேறு இடங்களில் அதற்கு மயக்க ஊசி செலுத்த முயற்சித்தனர். ஆனால் புலி மீண்டும் அடர்ந்த புதர் பகுதியில் சென்று பதுங்கிக் கொண்டது.

இதனால் ஐந்தாவது நாளாக புலியை பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. புலி அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வருவதால் கடும் சவாலாக இருப்பதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.