• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பு படையினர் மீது
தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் தவி பாலத்தில் இன்று காலை வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி லாரியில் இருந்து குதித்து தப்பியோடினர். இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.