

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த காதர் ஆஸ்பத்திரி மஸ்திதுல் அஸ்ரப் புதுத்தெரு பள்ளிவாசலில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர் மேலும் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
நேற்று அரபா தினம் என்பதால் உலகில் உள்ள ஹாஜிகள் அனைவரும் மெக்கா சென்று அங்கு ஹஜ் கடமையை நிறைவு செய்ததை ஒட்டி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் காதர் ஆஸ்பத்திரி அருகாமையில் உள்ள மஸ்ஜிதுல் அஸ்ரப் புதுத்தெரு பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர் மேலும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தனர் இதில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கூட்டாக இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

