

கன்னியாகுமரி ஊர் வெள்ளாளர் சமுதாய வகை டிரஸ்ட்க்கு பாத்தியபட்ட முத்தாரம்மன் கோவில் 300_ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் மண் புற்றாக இருந்த பகுதியை அன்றைய மக்கள் அந்த இடத்தில் சிறிதகா ஒரு கோவிலை கட்டிய எளுப்பியுள்ளார்கள்.மண்புற்றை அகற்றி கோவிலின் 125_வது ஆண்டில் அமைத்த கோவிலின் கருவறையில் மூன்று முகம் கொண்ட முத்தாரம்மன் வடக்கு முகமாக வீற்றிருக்கிறார்.
இந்த கோவில் வரலாற்றில் நடந்த ஒரு அற்புதம். எல்லா ஆண்டுகளிலும் இந்த கோவிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பன்னீர் காவடி எடுத்து செல்வது வாடிக்கை.

எப்போதும் போல் 2000_மவது ஆண்டிலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொண்டு சென்ற காவடி பன்னீரை கருவரையில் முருகனுக்கு அபிஷேகம் செய்ய எடுத்தபோது. பால் இருந்ததை பார்த்த கோவில் மேல்சாந்தி கன்னியாகுமரி காவடிக்கு பதில் வேறு காவடியை வைத்தது யார்.?என கேள்வி எழுப்பினார். அதன்பின் தான் பன்னீர்,பாலாக மறியிருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தது மட்டும் அல்ல.காவிடி திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி முத்தாரம்மன் கோவில் வந்ததும். காவிடியை முத்தாரம்மன் சொன்னதில் வைத்து பூஜை செய்தபின்.பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது மதம்,சாதி கடந்து கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மக்களும் அம்மனை வணங்கி சென்றது. இன்றும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மத்தியில் உலா வரும் நினைவாக உள்ளது.
பன்னீர், பாலாக மாறிய அந்த அதிசயம் நடந்த 23_ஆண்டுகளுக்கு பின் முழுமையாக பழுது பார்க்கப்பட்டு பு திருக்கோவிலின் வரி செலுத்தும் உரிமை பெற்றவர்களும், மத போதம் இன்றி அனைத்து மக்களும் இணைந்த திருப்பணி நன்கொடையும் இணைத்து கட்டப்பட்ட ராஜகோபுரம் மஹா கும்பாபாஷேகம் இன்று (ஜூன்29) நடைபெற்றது.எப்படி மதம் கடந்த விழாவோ அதை போன்று அரசியல் மனமாச்சரியமின்றி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கொண்டுள்ள பகுதியான 18வது வார்டின் உறுப்பினர் ஆனி ரோஸ் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் அவர்களது உரிமை பெற்ற விழாவில் பங்கேற்றது.
கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமாகி, எது எந்த கடல் என்று வேற்றுமை காண முடியாதது போல்.மஹா கும்பாபிஷேகம் விழாவில் மதம்,சாதி மறந்து இறை சன்னதியில் பக்தர்களாக பங்கேற்று.அருள் மிகு முத்தாரம்மனை வணங்கி வழிபட்டனர்.

