
வேப்பூர் அருகே அடுத்து, அடுத்து மூன்று ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 40பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் சரக்கு லாரி பழுதாகி நின்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலைக்கு வாகனங்கள் செல்லும் வழியில் போக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்துகள் மூன்று ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்னி பேருந்தில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போராடி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
