



விருத்தாசலம் அருகே ஊமங்கலம் கிராமத்தில் உள்ள குவாரி அருகே நண்பர்களுடன் மது குடிக்கும் பொழுது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இரண்டு பேரை இரும்புராடால் அடித்துக் கொலை செய்த நண்பன். நண்பரின் உடலை அங்கு உள்ள மணல்மேட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் எம்.புதூர் சேர்ந்த சரண்ராஜ் வயது 21, டி.புதூர் சேர்ந்த அப்புராஜ் மற்றும் இவர்கள் கடந்த எட்டாம் தேதி அப்புராஜ் மாயமானதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மறுதினம் சரண்ராஜ் என்பவர் காணவில்லை என புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போனவர்களை தேடி வந்தனர்.
கடந்த 20 நாட்களாக இந்த தேடுதல் பணி நடந்து வந்த நிலையில், இவர்கள் காணாமல் போனது குறித்து, இவரது நண்பர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்யப்பட்டு இருவரையும் தொடர்பு கொண்ட அதே பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் இருவரையும் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உடல் நெய்வேலி அருகே ஊமங்கலம் கிராமத்தில் என்எல்சி மணல்மேடு பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வருவாய் துறை மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் உதவியுடன் மண்ணை தோண்டும் பொழுது, இரண்டு உடல்கள் இருந்தது தெரிய வந்தது பின்னர் அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பிரேதத்தை கொண்டு சென்றனர்.
பின்னர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளரிடம் கூறியதாவது..,
பால்ராஜும் இறந்து போன அப்புராஜ் சரண்ராஜ் மூன்று பேரும் நண்பர்கள் இவர்கள் பால்ராஜ் வேலை செய்யும் ஊமங்கலம் குவாரியில் அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி பால்ராஜ், அப்புராஜ், சரண்ராஜ், இவர்கள் உட்பட ஐந்து பேர் பால்ராஜ் வேலை செய்யும் குவாரி அருகே மது அருந்தும் பொழுது அப்பொழுது அப்புராஜ், பால்ராஜ் சகோதரியை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் தனது லாரியில் வைத்திருந்த இரும்பு லாடை எடுத்து வந்து அப்புராஜ் தாக்கியுள்ளார். அப்போது சரண்ராஜ் தடுத்தவரையும் தாக்கி உள்ளார். இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலே இறந்துள்ளனர். இவரது உடலை அங்கேயே போட்டு ஒரு லோடு மண்ணை அவர்கள் மேல் கொட்டி விட்டு சென்று விட்டனர் என்று இவ்வாறு முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளார். மேலும் இவர்களிடையே வேற ஏதாவது பிரச்சனை உள்ளதா என்று போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பால்ராஜ் உட்பட ஐந்து நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்து போன அப்புராஜ் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

