• Wed. Mar 26th, 2025

பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தருபவர் தான் அப்பா… மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பேச்சு…

பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தருபவர் தான் அப்பா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி பேசியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கடலூர் ரெட்டி சாவடி பகுதியில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அமமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெங்கசாமி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி ஜெயலலிதாவின் திட்டங்களை நிறுத்தியது தான் திமுகவின் சாதனை என்றும், தற்போது அப்பா என அனைவரும் அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பது என முதல்வர் கூறும் நிலையில், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை, தன் வீட்டுப் பிள்ளையாக நினைக்கிறானோ அவன் தான் அப்பா… உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு ஏதேனும் அசம்பாவிதம் என்றால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று இருப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.