• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

“ஒமைக்ரான் பரவல் ஜனவரி, பிப்ரவரியில் அதிகரிக்கும்”- தகவல்

Byமதி

Dec 16, 2021

இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா தொற்று வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கணிசமாக அதிகரிக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

“ஒமைக்ரான் தொற்று முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவி வருகின்றது. பெரும்பாலான நாடுகளை அது எட்டியுள்ளது” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ‘ஒமைக்ரான் திரிபு வைரஸ் வேகமாக பரவக்கூடும் என்பது மட்டுமின்றி ஒமைக்ரான் நோய் பாதிப்பின் தீவிரம், டெல்டாவைவிடவும் குறைவாகவே இருக்கும்’ என்று டெல்லியில் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாதிரி ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளதாகவும் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்தாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுடன் பெருந்தொற்று முடிவுக்கு வரும் சூழலும் உள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.