• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து – 50க்கும் மேற்பட்டோர் பலி

Byமதி

Dec 16, 2021

ஹைதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்ததில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால், அப்பகுதியில் இருந்த 20க்கும் அதிகமாக வீடுகளில் தீப்பற்றியது. அதில் பலரும் காயமடைந்தனர். விபத்து தொடர்பான தகவலை அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்காக, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.