• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் க்கு – ஒபிஎஸ் இறுதி எச்சரிக்கை

ByA.Tamilselvan

Jun 21, 2022

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழு வரும் 23ம் தேதி கூடவுள்ள நிலையில் ஒபிஎஸ் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என இபிஎஸ்க்கு கடிதம் எழுதியிருந்தார்.அதனை நேற்று அதிமுக தலைமை நிர்வாகியான வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்து காண்பித்தார். இந்நிலையில் ஒபிஎஸ் அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை என கூறிய இபிஎஸ் தரப்புக்கு ஒபிஎஸ் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு இபிஎஸ்க்கு ஒபிஎஸ் எழுதிய கடிதத்தை அதிமுக தலைமை கழக நிர்வாகியே கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். ஆனால் தங்களுக்கு தெரியாது என்பதன் மூலம் தலைமை கழகத்துடன் இபிஎஸ் தொடர்பு இன்றி இருப்பது தெரியவந்துள்ளது என ஒபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.மேலும் பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓபிஎஸ் இறுதி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.