• Fri. Apr 18th, 2025

அரசு பேருந்துகளில் இனி விஐபி பெர்த்

Byகாயத்ரி

Jun 21, 2022

தமிழக அரசு பேருந்துகளில் 7ub எனப்படும் விஐபி பெர்த் வழங்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அதாவது குளிர் சாதனம் மற்றும் குளிர் சாதனம் இல்லாத பேருந்துகளில் இந்நாள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அவர்களது மனைவி போன்றோருக்கு 7ub இருக்கை மற்றும் விஐபி பெர்த் அட்வென்ட் எனப்படும் படுக்கை வசதி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து கிளை மேலாளர் களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.