• Tue. Feb 18th, 2025

ஜூன் 27ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

Byவிஷா

Jun 21, 2022

தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இப்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது, தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது. அதிமுக விவகாரம் இன்னும் ஒரு சில நாட்களில் முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் ஜூன் 27ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஆன்லைன் ரம்மி காரணமாகத் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் தொடரும் நிலையில், அதைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டு வரப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் தேவை என்பதால், அது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.