சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி சாகர் அணை அருகே 1080ஏக்கரில் சிப்காட் -தொழிற்பேட்டை அமைக்கும் தமிழக அரசு முடிவை கைவிட கோரியும் விவசாய நிலங்கள் எடுப்பதால், பவானி நதியில் ஏற்படும் கடும் பாதிப்பு அடையும் என்பதனால் கோபிசெட்டி பாளையம் கோட்டாச்சியரிடம் விவசாயிகள் வருகின்ற 16-ம் தேதி மனு அளிக்க உள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய அணை.அதன் நீர்தேக்க பகுதிக்கு அருகில் உள்ள சுங்ககாரன் பாளையம் கிராமத்தில்80 ஏக்கர் நிலமும்,பனையம்பள்ளி கிராமத்தில்304 ஏக்கர் நிலமும்,குரும்பபாளையம் கிராமத்தில்694 ஏக்கர் நிலமும்
மொத்தம் சுமார் 1080ஏக்கர்கிணற்றுப் பாசன நிலங்களைதமிழக அரசு எடுத்து சிப்காட்- தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்துள்ளது.இதற்காக சென்னை தலைமை நிலம் கையகப்படுத்துதல் அலுவலகத்தில் இருந்து வான்வெளி கருவி(IGRS) புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,அதனை சரிபார்க்க சென்னையில் இருந்து சிறப்பு வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்து முடித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கூட்டங்களை நடத்தி சிப்காட் அமைவதை கைவிட வேண்டும் என கோரி விடுத்து வந்த நிலையில், வருகின்ற 16-ம் தேதி கோபி கோட்டாச்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்து உள்ளனர்