• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்..,

Byமுகமதி

Apr 10, 2026

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, அதன் அரசியல் கட்சியான ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சி வேட்பாளர்களை நிறுவனத் தலைவர் மேனாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் வெ.ரத்தின சபாபதி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இ.இராமலிங்கம், திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆசிரியர் ஓய்வு சி.என்.முத்துக்கருப்பன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரா.சுரேஷ் ஆகியோரை அறிமுகம் செய்து அனைவருடைய குடும்பங்களின் வாழ்வு சிறக்க தரமான கல்வி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதனைப் பெறுவதற்கு அந்தந்த சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு இதற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் ஓபிசி ரைட்ஸ் இயக்கம் மற்றும் ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சிவகங்கை சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய மத்திய பகுதியில் ஐந்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம் அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட மடிக்கணினி (லேப்டாப்) சின்னத்தில் வாக்குகள் சேகரித்து அனைவரையும் வெற்றி செய்ய வேண்டுமென நமது உரிமையை நாமே மீட்டெடுப்போம் என்று வலியுறுத்தி பேசினார்.

பேட்டியின்போது மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா, முக்குலத்தோர் கூட்டமைப்புத் தலைவர் குணசேகரன், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சின்னத்தம்பி யாதவ், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ரெ.ராமச்சந்திரன், ஜெயக்குமார், நந்தகுமார், கருப்பையா, கோவணர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.