• Mon. May 29th, 2023

தேவையானவை:
சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் – 100 மிலி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 200 கிராம்.
செய்முறை:
சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு:
சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *