• Thu. Mar 28th, 2024

மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

ByA.Tamilselvan

Oct 1, 2022

அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது. இந்நிலையில், வட கொரியா மேலும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது என ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவை விட்டு நேற்று வெளியேறிய சில மணி நேரங்களுக்குள் வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *