• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராகுல் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை- நிதிஷ் குமார்

ByA.Tamilselvan

Jan 1, 2023

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி நிறுத்தபடுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பீகார் முதலமைச்சரும் ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில் சந்திரசேகர ராவ், சரத்பவார், நிதிஷ்குமார் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், பிரதமர் வேட்பாளராக போட்டியிட தமக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி கட்சியான காங்கிரஸ், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால், தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். புதிய இந்தியாவின் தேச தந்தை பிரதமர் மோடி என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், புதிய இந்தியாவின் புதிய தந்தை, தேசத்திற்காக என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். சுதந்திர போராட்டத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.