புத்தாண்டு தினத்தில் தன்னை சந்திக்க வந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தும்,பறக்கும் முத்தத்தை கொடுத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உற்சாகமூட்டினார்.
புத்தாண்டு தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு பளீரென வெள்ளை நிற உடையில் விஜயகாந்த் நேற்று காலை வந்தார். அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோரும் வந்தனர். அப்போது திரண்டிருந்த நிர்வாகிகள்-தொண்டர்களும் விஜயகாந்தை பார்த்து ‘கேப்டன் வாழ்க… கேப்டன் வாழ்க…’ என்று உற்சாக குரல் எழுப்பினர். விஜயகாந்தும் அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் கட்சி அலுவலக வாசற்படிக்கு விஜயகாந்த் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரை சற்று தள்ளி நின்றபடி நிர்வாகிகள், தொண்டர்கள் பார்த்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொண்டர்களை பார்த்த விஜயகாந்த் தனது கையை அசைத்தும், தனது கட்டை விரலை உயர்த்தி காட்டி உற்சாகமூட்டினார். பின்னர் தன்னை சந்திக்க வந்த அனைவருக்குமே இருகரம் கூப்பி அவர் நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பறக்கும் முத்தத்தை கொடுத்தார். ‘ இந்த நிலையிலும் தொண்டர்களை கம்பீரமாக சந்திக்கிறாரே…’ என்று தொண்டர்க நெகிழ்ச்சி அடைந்து போனார்கள். புத்தாண்டு பரிசாக நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு தலா 100 ரூபாய் நோட்டை பிரேமலதா வழங்கினார். ஏறக்குறைய 40 நிமிடங்களுக்கு பிறகு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டனர். புத்தாண்டையொட்டி தொண்டர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- பழனி அரசு மருத்துவமனையில்..,
தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் […] - சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]