இனி மின்வெட்டு இருக்காது“சீரான மின் விநியோகம் கிடைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.!
கடந்த சிலநாட்களா தமிழகத்தில் மின் வெட்டு நிலவியது. இனி தமிழகம் இருளில் முழ்குமா என எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன .தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தொடரிலும் விவாதிக்கபட்டுபெரும் பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக பேசிய செந்தில் பாலாஜி,” மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை.இதன் காரணமாகவே 41 இடங்களில் மட்டும் மின் தடை ஏற்பட்டது. கடந்தகால அதிமுக ஆட்சியின் போதும் இதுபோன்ற மின்வெட்டு 68 முறை நடைபெற்றுள்ளது. இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு தினசரி வழங்க வேண்டிய நிலக்கரியை யும் போதிய அளவு வழங்கவில்லை. இதனால் தமிழகத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிலக்கரி பெறப்படும்.: எனவே இனி சீரான மின்சாரம் வழங்கப்பட்டு மின்வெட்டு ஏற்படாது என்றார். நேற்று மாலை 5 மணி முதல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்படவில்லை.
இனி மின்வெட்டு இல்லை! -அமைச்சர் செந்தில் பாலாஜி
