• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்

ByA.Tamilselvan

Jun 8, 2023

மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச மின்சாரம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மேலும் மின்கண்டம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியானநிலையில் தற்போது மின்கட்டணம் உயர்வு இல்லை என மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.
ஆனாலும், மின்வாரியத்திற்கு 1,65,000 கோடி ரூபாய் கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க வேண்டுமென்றால் அடுத்த ஐந்து ஆண்டிற்கு வருடத்திற்கு ஆறு சதவீதம் அல்லது ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தி இருந்தது. அதற்கான ஒப்புதலையும் வழங்கியது.
இந்தநிலையில், நேற்று உயர் அதிகாரிகளுடன் மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை என்றும் வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.