

பல வெற்றிப் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் மாதவன். இவர் தற்போது துபாயில் குடியேறியுள்ளார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து வருகிறார். அவர் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றார். இதை தொடர்ந்து அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், அவர் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக மாதவன், தன் மனைவி சரிதாவுடன் சென்று துபாயில் குடிபெயர்ந்துள்ளார்.
இது குறித்து நடிகர் மாதவன், என் மகன் வேதாந்த், 2026-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தற்போது தயாராகி வருகிறார். அதற்காக அவர் பயிற்சி பெறுவதற்கு பெரிய நீச்சல் குளங்கள் தேவை. ஆனால் கொரோனா காரணமாக மும்பையில் உள்ள நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் அவர் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக நானும், என் மனைவியும் துபாயில் குடியேறியுள்ளோம். அவரை ஒரு நடிகராக்குவதில் எனக்கும், என் மனைவிக்கும் விருப்பமில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.
