பீகாரில் தற்போது 8 வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிதிஷ்குமார் மற்றும் கூட்டணியில்உள்ள லாலுவின் பழையபுகைப்படம் வைரலாகி உள்ளது.
பீகாரில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் நிதிஷ் – லாலு சேர்ந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் லவ்ஜிகாத் சட்டம், அக்னிபத் என பாஜகவின் அரசியலுக்கு எதிராக நிதிஷ்குமார் களமாடியதால் இருதரப்புக்கும் மோதல் முற்றி , இறுதியில் கூட்டணியை முறித்துக்கொண்டார் நிதிஷ். இப்போது பழைய நண்பர் லாலுவின் கட்சி ஆதரவுடன் 8 வது முறையாக முதல்வரானதை பிரிதிபலிக்கும் வகையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.