• Sat. Feb 15th, 2025

பாபா பக்ரூதின் வீடு உள்பட 6 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

ByIyamadurai

Feb 3, 2025

சென்னை, மன்னார்குடி உள்பட ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவுதிரட்டுவதாகவும், அதற்கு ஆள் சேர்ப்பதற்காகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை, மன்னார்குடி உள்பட ஆறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் நிலையில் இன்று அதிகாலை முதலே அவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இவர் வீட்டில் கடந்த 2022-ம் ஆண்டும் என்ஐஏ சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.