

தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றலம்பலம் படத்தின் செம ஹாட் அப்டேட்டை அப்படத்தின் டைரக்டர் வெளியிட்டுள்ளார்.
இந்திய அளவில் ஒரே நேரத்தில் பல மொழிகளில், பல படங்களில் நடித்து வரும் டாப் நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான The Gray Man படம் கோடை விடுமுறையில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மாளவிகா மோகனனுடன் இணைந்து இவர் நடிக்கும் மாறன் படமும் மார்ச் மாதம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
பாலிவுட்டிலும் தனுஷிற்கு வரவேற்பு அதிகரித்து வருவதால் பாலிவுட் படங்கள் பலவற்றிலும் நடிக்க தனுஷ் கமிட்டாகி உள்ளாராம். தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் படங்களின் வேலைகள் கிட்டதட்ட முடிந்து விட்டதால், தற்போது கமிட்டாகி உள்ள படங்களில் நடித்து முடித்த உடன் பாலிவுட்டில் கவனம் செலுத்த தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு முதல் பைலிங்குவல் படமான வாத்தி, இரட்டை வேடங்களில் நடிக்கும் நானே வருவேன் ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படங்களின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அதோடு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.
தனுஷ், நித்தியா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானிசங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒருவரின் வாழ்க்கையில் மூன்று கால கட்டங்களில் நடப்பது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷிற்கு மூன்று ஜோடிகள் என கூறப்படுகிறது.
டைரக்டர் மித்ரன் ஜவஹர், திருச்சிற்றம்பலம் படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி திருச்சிற்றம்பலம் படத்தின் ஷுட்டிங்கும் முடிந்து விட்டதாம். தற்போது படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டு விட்டதாம். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
